மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
20-Dec-2024
விழுப்புரம் : புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில் பதில் சொல்: பரிசு வெல் வினாடி வினா போட்டி, விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அதில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் யுவராணி, விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்த போட்டியில் 9ம் வகுப்பு மாணவர்கள் நித்தீஷ், தேவா அணி முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ், செழியன் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும பொருளாளர் சிதம்பரநாதன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
20-Dec-2024