உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் நாளிதழ் காவல்துறையின் நண்பன்

தினமலர் நாளிதழ் காவல்துறையின் நண்பன்

விழுப்புரம்: தினமலர் நாளிதழ், கல்வி, சமூக சேவை, மற்றும் கலை போன்ற துறைகளிலும் தனது பங்களிப்பினை செய்து வருகிறது என, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: சமூகத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமூக உறவு நிலவிட, பத்திரிகைகள் பணி முக்கியமானது. இதில், தினமலரின் பணி மிகச்சிறந்த முறையில் அமைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகள், மாநாடு, பேரணி மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து, பத்திரிக்கை செய்தி மூலம், முக்கியமான தகவல்கள் மற்றும் முன்னேற்பாடு செய்தற்கான வழிவகைகள் கண்டறிய உதவியாக அமைகிறது. காவல்துறையினர் தங்களது கடமையை சிறப்பாக செய்வதற்கு தினமலர் சிறந்த நண்பனை போல் உறுதுணையாக விளங்குகிறது. இப்பத்திரிக்கை 75 வது ஆண்டில் மக்கள் பணியில் ஈடுபடுவதை பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை