உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் பட்டம் இதழ் வழங்கல் 

தினமலர் பட்டம் இதழ் வழங்கல் 

விழுப்புரம் : ராயல்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில், மாணவர்களுக்கு தினமலர் பட்டம் இதழ் வழங்கும் விழா நடைபெற்றது.விழுப்புரம் பழைய கோர்ட் ரோடு, டி.இ.எல்.சி., நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், லயன்ஸ் மண்டலத் தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருள் ஜான்சன், லயன்ஸ் வட்டார தலைவர் கோபு முன்னிலை வகித்தனர். லயன்ஸ் வட்டாரத் தலைவர் மீன் ராஜா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு, தினமலர் நாளிதழ் இணைப்பு பட்டம் இதழ் வழங்கினார்.இதில், ராயல்ஸ் லயன்ஸ் கிளப் தலைவர் சபரிநாதன், செயலாளர் குமார், பொருளாளர் சதீஷ், தொழிலதிபர் குமார், நவீன் குமார், பள்ளி ஆசிரியர்கள் எலியாஸ் ஜெகாந்தன், டைட்டஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை