உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தினமலர்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தினமலர்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, தினமலர் நாளிதழ் அரும்பணி ஆற்றி வருகிறது. நாளிதழ் துவங்கி 75வது ஆண்டு துவங்குகிறது. புதுச்சேரி பதிப்பு தினமலர், கடந்த 1991 ம் ஆண்டு துவங்கிய போது, ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக விளங்கியது. கடந்த 1993 ம் ஆண்டு தென்ஆற்காடு மாவட்டம், கடலுார் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் உருவாக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக நந்தன் கால்வாயின் நிலை குறித்து தொடர்ந்து செய்தி வெளியானதால், திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. செஞ்சியில் அரசு கலைக் கல்லுாரி கட்டடம் அமைக்கப்பட்டது. மார்க்கெட் கமிட்டியில் ரூ. 15 கோடி மதிப்பிலான குடோன் வசதி, செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம் நகரின் நீண்ட நாள் பிரச்னையான, புதிய பஸ் நிலைய கட்டடப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிடங்கல் ஏரி வரத்து வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. வீடூர் அணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை மேம்படுத்தி, பூங்கா சீரமைக்கப்பட்டது. கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. வானுாரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டடம் அமைத்து, கல்லுாரி இயங்கி வருகிறது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மெயின் ரோட்டில் தார் சாலை, திருவக்கரையில் ஜியோ பார்க், வானுாரில் ஐ.டி.,பார்க், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு- பெரும்பாக்கம் தார் சாலை மற்றும் மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து குயிலாப்பாளையம் வரை(ஆரோவில் சாலை) புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம், கழுவெளி ஏரி பகுதி இறால் பண்ணை ஆக்கிரமிப்புகள் அகற்றம், பக்கிங்காம் கால்வாய், கழுவெளி ஏரியை இணைக்கும் இடத்தில் பழுதான தடுப்பணையை ரூ.161 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலையில் கழிவு நீர் வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. கண்டமங்கலம் புதிய தாலுகாவாக பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது. திருவெண்ணெய்நல்லுார் அரசு கலைக்கல்லுாரிக்கு, சின்னசெவலை-மணக்குப்பம் கிராம எல்லையில் நிரந்தர கட்டடம் அமைக்கப்பட்டது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அடிக்கடி செய்தி கட்டுரை வெளியானதால், திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழுப்புரம் பூந்தோட்டம் ஏரி பகுதியில் உருவான புதிய பஸ் நிலைய வளாகத்தில், மழைநீர் தேங்குவதை பலமுறை படத்துடன் செய்தியாக வெளியிட்டதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு நீச்சல் குளம் என படிப்படியாக புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த திட்டங்களை கொண்டு வரவும், விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், தினமலர் நாளிதழ் முக்கிய பங்காற்றி உள்ளது. விழுப்புரம் மாவட்ட தலைநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டு வரப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு, துாண்டுகோலாக தினமலர் நாளிதழ் விளங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை