உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

விழுப்புரம்,: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.வல்லம், கண்டமங்கலம் உள்ளிட்ட ஒன்றியங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நுாறு நாள் வேலை வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கும் முழு ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நுாறுநாள் வேலை அட்டை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வல்லம் ஒன்றிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தர்ணாவை கைவிட்டு, மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர். பின், கலெக்டர் அலுவலகத்தில் இக்கோரிக்கை மனு கொடுத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை