மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
திண்டிவனம்; தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. திண்டிவனம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு, வட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். போராட்டத்தில், அன்ன அந்தோதயா யோஜனா ரேஷன் அட்டை கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் உடனடியாக அட்டை வழங்க வேண்டும். திண்டிவனம் தாலுகாவில் சொந்த வீட்டுமனை இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரசின் முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். விழுப்புரம்: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் சார்பில், விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால், மாற் றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.