செஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா
செஞ்சி: செஞ்சியில் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் அமுதசுரபி கருணை அறக்கட்டளை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடந்தது. கூட்ட அமைப்பின் மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் ராமன், பொருளாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் சிம்மசந்திரன், மாநில செயலாளர் கருப்பையா, மாநில துணைத் தலைவர்கள் சீனிவாசன், பழனி, திருச்சி மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட தலைவர்கள் திருவண்ணாமலை குமார், கள்ளக்குறிச்சி கலையரசன் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் ரஷீத், அமுதசுரபி அறக்கட்டளை அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மகளிர் அணி துணை தலைவர் இந்துமதி நன்றி கூறினார்.