உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்

விழுப்புரம்: மாவட்ட பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக ஓசோன் தின விழா பனையபுரத்தில் நடந்தது.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுமித்ரா தேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் இளமதி, 500 மாணவ, மாணவியர்களுக்கு பழம் தரும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். டாக்டர் வெற்றிவேல் மரக்கன்றை நட்டு வைத்தார்.ஓசோன் பாதுகாப்பு இயக்க பொருளாளர் ராசையன், செயலாளர் ஜெயச்சந்திரன், கதிர்வேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை