மேலும் செய்திகள்
விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
27-Apr-2025
கோட்டக்குப்பம்: லோக்சபா தொகுதி மறுவரையால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து தி.மு.க.,வினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தமிழகத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பணியை மத்திய அரசு துவங்க உள்ளது. இதற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பு செய்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து கோட்டக்குப்பம் நகர தி.மு.க., சார்பில், பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நகர துணை செயலாளர்கள் சரவணன், பாபு, நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் மணி, மருத்துவர் அணி துணை அமைப்பாளர் வினோபாரதி, நகர்மன்ற துணை தலைவர் ஜீனத்பீவி முபாரக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துவேல், புஷ்பராஜ், தீர்மானக்குழு உறுப்பினர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Apr-2025