உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

செஞ்சி; செஞ்சி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய குழுவினர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி அனைவருக்கும் புத்தாடை, காலண்டர், பொங்கல் பரிசு தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துப்புர ஆய்வாளர் பார்கவி, தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், செந்தில்குமரன், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !