மேலும் செய்திகள்
போக்குவரத்து போலீசாருக்குஜூஸ், தொப்பி வழங்கல்
20-Mar-2025
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சார்பில் கோடையை முன்னிட்டு நீர் மோர் பந்தலை திறந்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பியை டி.எஸ்.பி., வழங்கினார்.விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சார்பில், டோல்கேட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார், வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணியை வழங்கினார். பின்னர் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பியை வழங்கினார்.போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், பிரபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
20-Mar-2025