மேலும் செய்திகள்
மாநில கராத்தே போட்டிகள்
02-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்தியன் கராத்தே அசோசியேஷன் சார்பில், 4வது மாவட்ட அளவிலான கராத்தே விளையாட்டு போட்டிகள் நடந்தது.பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கில் நடந்த போட்டியை விழுப்புரம் முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட கராத்தே விளையாட்டு தலைவர் தீனதயாளன், செயலாளர் முருகன், துணை தலைவர் செல்வகுமார், தலைமை பயிற்சியாளர் ரகுராமன் முன்னிலை வகித்தனர். கராத்தே ஒருங்கிணைப்பு குழுவினர் போட்டியை நடத்தினர்.சப் ஜூனியர், சீனியர் என, 6 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில், மாணவ, மாணவியர்கள் 480 பேர் பங்கேற்றனர். இதில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் கராத்தே வீரர்களுக்கு, சான்றிதழ், பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், முதல் 3 இடங்களை பெறும் வீரர்கள், வரும் ஜனவரி மாதத்தில் சென்னையில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
02-Dec-2024