மாவட்ட கண்காணிப்புக் குழுக்கூட்டம்
விழுப்புரம்:மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டுப்பதிவு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை கண்காணித்து, மதிப்பீடு செய்யும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கலெக்டர் நேர்முக உதவியாளர் யோகஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ராஜசேகர், சமூகநல அலுவலர் ராஜம்மாள், நகராட்சி கமிஷனர் வசந்தி, தாசில்தார் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசுகையில்; விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் 20,681 மாற்றுத்திறனாளி உள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்காக தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள சக்ஸாம் மொபைல் செயலி பயன்டுத்த வேண்டும். ஓட்டுபதிவின்போது, மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வாக்களிக்கவும், சாய்தளம் அமைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிய ஒருவரை அழைத்து செல்ல அனுமதிப்பது, இலவச வாகன வசதி, வீட்டில் இருந்தபடி ஓட்டுபதிவு செய்யும் வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார்.