தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
திண்டிவனம்: முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திண்டிவனத்தில் நாளை 23ம் தேதி வடக்கு மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் சேகர் அறிக்கை:விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,அவரச செயல்வீரர்கள் கூட்டம் நாளை 23ம் தேதி மாலை 4:00 மணியளவில், திண்டிவனம் ஜே.வி.எஸ்.திருமண மண்டபத்தில் நடக்கிறது. அவைத் தலைவர் மஸ்தான் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொன்முடி சிறப்புரையாற்றுகிறார்.கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கூட்டத்தில், வரும் 28ம் தேதி திண்டிவனத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது, வரும் 27ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.