உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

வானுார் : கிளியனுாரில் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தென்கோடிப்பாக்கத்தில் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் வெற்றி பெறுவது. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தனபால் ராஜ்.மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., அணி தலைவர் வேலு, இளைஞரணி விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அழகேசன், தகவல் தொழில்நுட்ப அணி முத்தமிழ், மாவட்ட கவுன்சிலர்கள் கவுதம், பிரேமா குப்புசாமி, முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் அய்யப்பன், கிருஷ்ணராஜ், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை