உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்

பொறுப்பிலிருந்து விடுவிக்க   தே.மு.தி.க.,நிர்வாகி கடிதம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு மாவட்ட செயலாளருக்கு கடிதம் எழுதிய ஒன்றிய செயலாளர் .மேல்மலையனுார் தே.மு.தி.க., கிழக்கு ஒன்றிய செயலாளராக 10 ஆண்டுகளாக முத்துசாமி ;47, உள்ளார்.இவர்குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளதாவது;கட்சியில் 20 ஆண்டுகளாக உள்ளேன், குடும்ப சூழ்நிலை , உடல் நலக்குறைவு , தொழில் சம்மந்தமாக முழு ஒத்துழைப்பு தரமுடியாத நிலையில் கட்சி வளர்ச்சி நலன் கருதி ஒன்றிய செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறும், அடிப்படை உறுப்பினராக செயல்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !