தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி முகையூர் வடக்கு ஒன்றிய பூத் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.முகையூரில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கி, பூத் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, அவர், 'ஓரணியில் - தமிழ்நாடு' புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார்.மாவட்ட ஊராட்சி சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் காத்தவராயன், முருகையன், கோபால், சாந்தகுமார், சுலோசனா ஏழுமலை, சேகர், ஜெகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் உட்பட பூத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.