மேல்மலையனுாரில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய தி.மு.க., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் நாராயணமூர்த்தி, சாந்தி சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் அனைத்து பிரிவு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.