மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
01-Nov-2025
மரக்காணம்: மரக்காணம் அடுத்த சிறுவாடியில் தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில் திண்டிவனம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் தயாளன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற தலைப்பில் சிறப்புரையாற் றினார். கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். துணை சேர்மன் பழனி நன்றி கூறினார்.
01-Nov-2025