உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., இனிப்பு வழங்கல்

துணை முதல்வர் பிறந்த நாள் தி.மு.க., இனிப்பு வழங்கல்

மரக்காணம்: மரக்காணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா நடந்தது.இதனை முன்னிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் நடந்தது.மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலா ளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி குப்புராஜ் வரவேற்றார். கீழ்புத்துப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் துர்கா தேவி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !