தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு
விழுப்புரம்:விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்முக தேர்வு லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. தமிழகத்தில் தி.மு.க., சார்பில், மாவட்டங்களின் சார்பு அணி நிர்வாகிகள், நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, விழுப்புரம் மத்திய மாவட்டத்தில், பொறியாளர் அணி நிர்வாகிகள் நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கான பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான ஆலோசனை கூட்டம், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பிரதீப், விழுப்புரம் தொகுதி பார்வையாளர் முன்னாள் எம்.எல்.ஏ., துரை சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் புகழ்செல்வகுமார் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரன், கிருஷ்ணமூர்த்தி, கோபிநாத், மூர்த்தி, பிரசாத், வெங்கடேசன், திருமுருகன், ரீகன்ராஜ் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதனையடுத்து, தொகுதி வாரியாக பொறியாளர் அணியினருக்கு, மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.