உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., ஐ.டி., பிரிவு ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., ஐ.டி., பிரிவு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், விழுப்புரம் தொகுதி பூத் ஏஜென்ட்டுகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், மும்மூர்த்தி, ராஜா, பிரபாகரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் துரை சரவணன் ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும். தகவல் தொழில் நுட்ப அணியினர், தி.மு.க., ஐ.டி., பிரிவு சேனலுடன் இணைந்து, பூத் ஏெஜன்ட்டுகள் மூலம் நிர்வாகிகள், கட்சியினரை இணைத்து, தி.மு.க., அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள், அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்ச நாதன், சம்பத், மாவட்ட கவுன்சிலர்கள் கேசவன், அரிராமன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, மாவட்ட பொறியாளர் அணி செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி