மேலும் செய்திகள்
சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு
27-Mar-2025
செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரம்ஜான் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடந்தது.வட்டார ஐக்கிய ஜமா அத் தலைவர் சையத் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், '12 மாதங்களில் ஒரு மாதத்தை ஒதுக்கி, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் மாதம் ரம்ஜான் மாதம். தன் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், கருத்து வேறுபாடு இருப்பவர்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இந்த மாதத்தின் சிறப்பு.நோன்பு எடுக்க முடியாதவர்கள் நோன்பு எடுப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சட்டசபையில் தமிழக முதல்வர் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதால் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது' என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், காங்., மாநில துணைத் தலைவர் ரங்கபூபதி, ம.தி.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், கண்மணி, செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் உட்பட பலர் பங்கேற்றனர்.
27-Mar-2025