தி.மு.க., பாகநிலை முகவர்கள் கூட்டம்
திண்டிவனம்: திண்டிவனத்தில், தி.மு.க., பாகநிலை முகவர்கள் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.செஞ்சி சாலை, தனியார் திருமண மண்டபத்தில் தொகுதியை சேர்ந்த நகரம் மற்றும் ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம் சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் தலைப்பில், தி.மு.க.,உறுப்பினர் சேர்க்கை, ஓட்டுச்சாவடி வாரியாக பாகநிலை முகவர்கள் மற்றும் பூத் டிஜிட்டல் முகவர் பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். நகர செயலாளர் கண்ணன், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர். சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜாபர் அலி, உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமரன், பொருளாளர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கவுதமன், அயலக அணி முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி முருகன், சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.