உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க.,பொது செயாளர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.திண்டிவனம் பகுதிகளில் பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் வகாப்பு நகர், காந்திநகர், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை நேற்று பிற்பகல் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பார்வையிட்டார்.தொடர்ந்து திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா நிவாரண பொருட்களை வழங்கினார்.இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுந்தரேசன் வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலாளர் காதர் பாஷா, உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தே.மு.தி.க., பொது செயாளர் நிவாரண உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை