உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

தி.மு.க., தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் ; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அமைப்பாளர் அன்பரசு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் மாநில துணைச் செயலாளர் தமிழ்மாறன் ஆலோசனை வழங்கினார்.துணை அமைப்பாளர்கள் சாம்பசிவம், பாலாஜி, புஷ்பராஜ், சசிரேகா பிரபு, கிருஷ்ணராஜ், சுரேந்தர், தொகுதி அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பெஞ்சல் புயல் பாதிக்கப்பட விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து, பணிகளை துரிதப்படுத்தி நிவாரணம் வழங்கிய முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பொன்முடி, மாவட்ட செயலாளர் கவுதம்சிகாமணி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவிப்பது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற தகவல் தொழில் பணி சிறப்பாக பணியாற்றுவது.அரசின் சாதனை திட்டங்களை சமூக வலை தளங்கள் மூலம் கொண்டு சேர்ப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ