உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., திண்ணை பிரசாரம்

தி.மு.க., திண்ணை பிரசாரம்

செஞ்சி : செஞ்சி ஒன்றிய கிராமங்களில் தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். பாடி, ஒட்டம்பட்டு கிராமங்களில் சேர்மன் விஜயகுமார் தலைமையில் 'இல்லம் தோறும் ஸ்டாலின்' திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர். 33 மாத தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வீடு தோறும் வழங்கினர். பெண்களுக்கு தி.மு.க., ஆட்சியில் செய்துள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை அமைப்பாளர் செந்தில், நிர்வாகிகள் ஜெய்சங்கர், ஜெயபால், ஜெயபாலன், தேவராஜ், ராஜேந்திரன், இளையபெருமாள், உமாபார்வதி, இளையராஜா, ஏழுமலை, சாரங்கபாணி, காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி