கண்டமங்கலம் ஒன்றியத்தில் தி.மு.க., நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம்: கண்டமங்கலம் ஒன்றியத்தில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானூர் தொகுதி கண்டமங்கலம் மத்திய ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சி, கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம் வி.மாத்துார், தெற்கு ஒன்றியம் கோண்டூர் ஆகிய இடங்களில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட பொருப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு ஆடு, மாடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில், தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலகுழு இணை செயலாளர் புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர்கள் சீனுசெல்வரங்கம், புஷ்பராஜ், செல்வமணி, கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வி. தெய்வகணபதி, முருகன், பாலசுப்ரமணி, லட்சுமணன், செந்தில், சின்னத்தம்பி, மாவட்ட கவுன்சிலர் பனிமொழி செல்வரங்கம், ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், தியாகி ஐயாக்கண்ணு, இளைஞரணி பிரவீன்குமார் மற்றும் கிளைச் செயலாளர்கள், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.