உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு

வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் ரங்கநாதன் தெரு, தாமரைக்குளம் பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோலியனுாரான் வாய்க்கால்களில் துார்வாரும் பணி நடந்தது. இப்பணியை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, அனைத்து துறைகள் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காதபடி அனைத்து கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்கள் மற்றும் கோலியனூரான் வாய்க்கால்களில் துார்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், தாசில்தார் கனிமொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை