உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இ.சி.ஆரில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றம்

இ.சி.ஆரில் தேங்கிய மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றம்

கோட்டக்குப்பம்: இ.சி.ஆர்., சாலையில் தேங்கிய தண்ணீரை, நெடுஞ்சாலைத்துறையினர், மோட்டார் மூலம் வெளியேற்றினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை பெய்த மழையில், கோட்டக்குப்பத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. குறிப்பாக இ.சி.ஆர்., சாலையில் சின்ன முதலியார்சாவடி சந்திப்பில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாலையில் சூழ்ந்தது.இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட துாரத்திற்கு சாலையில் மழை நீர் தேங்கியதால், டூ வீலர்களில் செல்வோரும் அவதிப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்தனர். மற்றொரு புறத்தில் சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றினர். இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற வாகனங்கள், சிறிது துாரத்திற்கு எதிர்புற சாலைக்கு மாற்றி விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ