சொட்டுநீர் பாசன அமைப்பு செயல் விளக்க பயிற்சி
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைப்பு குறித்து செயல் விளக்க பயிற்சி நடந்தது.விக்கிரவாண்டி அருகே காணை ஒன்றியம் ஏழு செம்பொன் கிராமத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நடந்த செயல் விளக்க பயிற்சிக்கு, உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் தயாநிதி இளநிலை பொறியாளர் வெங்கடேச பெருமாள் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் தில்லை நடராஜன் வரவேற்றார்.உதவி வேளாண்மை அலுவலர்கள் கலையரசன், அன்பரசன், ஜெயின் சொட்டுநீர் பாசன வல்லுனர் நடராஜன், பிரதிநிதிகள் விஜய் சங்கர், பிரபு ஆகியோர் விவசாயிகளுக்கு, சொட்டுநீர் பாசனம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஏழு செம்பொன் கிராம முன்னோடி விவசாயிகள் பலர் பயிற்சியில் பங்கேற்றனர்.