போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், போக்குவரத்து போலீசார் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.பெருந்திட்ட வளாக மைதானத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு ரெட்கிராஸ் சொசைட்டி அவைத் தலைவர் திருமா வளவன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜய், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர் சவுந்தர்ராஜன், டாக்டர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர்.இதில், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பு வரை ஊர்வலமாக சென்றனர்.