உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்

போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்

விழுப்புரம்: மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஊர்வலத்தை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில், விழுப்புரம் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.தொடர்ந்து, அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.அப்போது, ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, கலால் உதவி ஆணையர் ராஜூ, ஆர்.டி.ஓ., முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !