டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
செஞ்சி; செஞ்சி புதிய டி.எஸ்.பி.,யாக கார்த்திகா பிரியா பொறுப்பேற்றார். செஞ்சி டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டர். இதையடுத்து விழுப்பும் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த கார்த்திகா பிரியா புதிய டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.புதிதாக பொறுப்பேற்ற டி.எஸ்.பி.,க்கு செஞ்சி உட்கோட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.