துவாரகா கபே ஆண்டு விழா
விழுப்புரம் : விழுப்புரத்தில் துவாரகா கபே இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. விழுப்புரம், நேருஜி சாலையில் உள்ள துவாரகா கபே நிறுவனத்தின், இரண்டாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. துவாரகா குழும நிறுவனர் பேச்சர்லால் தலைமை வகித்தார். உரிமையாளர் கார்த்திக் வரவேற்றார். நிர்வாகிகள் திலீப்குமார், மணீஷ், பொறியாளர் சங்கரமூர்த்தி முன்னிலை வகித்தனர். இந்த விழாவில், அனைத்து பணியாளர்களுக்கும் சேலை, இனிப்புகள் வழங்கினர். ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.