இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.ஐ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு நிர்வாகி ராஜ்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் நாராயணன், கிளை செயலாளர் குப்புசாமி, கிளை துணை செயலாளர் கண்ணன், நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சவுரிராஜன் ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இதில் காரப்பட்டு கிராமத்தில் உள்ள சேமக்கோட்டையான் வாய்க்காலை முழுமையாக துார்வார வேண்டும்; சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஏரி வாய்க்காலை துார்வாரி கரைகளை உயர்த்தி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.