உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை விற்ற முதியவர் கைது

புகையிலை விற்ற முதியவர் கைது

விழுப்புரம் : விழுப்புரத்தில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்ற முதிய வரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் தலைமையிலான போலீசார், கடந்த 19ம் தேதி சாலாமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள மளிகை கடையில், அரசால் தடை செய்த குட்கா பொருட்கள் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம், 70; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, கடையில் இருந்து 144 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவத்தில், புதுச்சேரியை சேர்ந்த சலீம் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி