உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது

திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் இளமங்கலம் ஏரிக்கரையில் நேற்று காலை 11:30 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது செஞ்சி வட்டம், இந்திரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார், 60; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த போது பிடிபட்டார். இவரிடமிருந்து ஹான்ஸ், கூல்லிப், விமல் பான்பராக் ஆகிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ