உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு மனை தகராரில் சிறுவனுக்கு கத்தி வெட்டு: முதியவர் கைது

வீட்டு மனை தகராரில் சிறுவனுக்கு கத்தி வெட்டு: முதியவர் கைது

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே வீட்டு மனை தகராரில் சிறுவனை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலம் அடுத்த புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த வரலட்சுமி 40; என்பவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் 60; என்பவருக்கும் இடையே வீட்டு மனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் 1.00 மணி அளவில் இருவருக்கும் மீண்டும் வீட்டு மனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த புருேஷாத்தமன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வரலட்சுமியின் மகன் பிரதாப், 16; கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த பிரதாப்பை அருகில் இருந்தவர்கள் ஜிப்மர் மருத்துமவனையில் சேர்த்தனர். வரலட்சுமி புகாரின் பேரில் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழக்குப் பதிந்து புருஷோத்தமனை கைது, நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ