உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

செஞ்சி: சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி இறந்தார்.செஞ்சியை அடுத்த செம்மேடு மதுரா வீரம நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; இவர், நேற்று மாலை 6.30 மணியளவில் செம்மேடு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது செஞ்சியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை