வாகனம் மோதி முதியவர் பலி
கோட்டக்குப்பம் : அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார். கிளியனூர் அடுத்த பெரிய கொழுவாரி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளை அங்குள்ள வயல் வெளியில் மேயத்துவிட்டு, நேற்று மாலை 5;30 மணிக்கு, வீட்டிற்கு திரும்பியுள்ளார்.அப்போது, பெரிய கொழுவாரி சமத்துவபுரம் சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் காயமடைந்த முதியவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் வழியிலேயே இறந்துவிட்டார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.