வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் சாவு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே வைக்கோல் போரிலிருந்து விழுந்த முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த சிந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி, 65; கடந்த மாதம் 24ம் தேதி, இவரது நிலத்தில் வைக்கல் போர் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலிருந்து தவறி கீழே விழுந்தார்.இதில், காயமடைந்த அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று முன்தினம் இறந்தார்.அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.