மேலும் செய்திகள்
பைக் மோதி முதியவர் பலி
23-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் போதையில் சிகரெட் பிடித்த போது தீப்பிடித்ததில் முதியவர் இறந்தார். விழுப்புரம், வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசிங், 60; இவர், கடந்த 31ம் தேதி தனது வீட்டில் குடிபோதையில் சிகரெட் பிடிப்பதற்காக தீப்பெட்டியை உரசிய போது, நிலை தடுமாறி நெருப்பு அவர் கட்டியிருந்த லுாங்கி மீது விழுந்தது. இதில் ஏற்பட்ட தீயில் சந்திரசிங் படுகாயமடைந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Oct-2025