உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பஸ்சில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

அரசு பஸ்சில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

விழுப்புரம்: திண்டிவனத்தில் அரசு பஸ்சில் பயணித்த முதியவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 66; நேற்று முன்தினம் திண்டிவனம் செல்லும் தமிழக அரசு பஸ்சில் பயணித்தார். திண்டிவனம் பஸ் நிறுத்தம் வந்தும், பஸ்சில் இருந்து இறங்காமல் அமர்ந்திருந்தார். இதை கவனித்த கண்டக்டர் நிசாரூதீன் முதியவர் ரங்கநாதனை எழுப்ப முயற்சித்தார். மயங்கிய நிலையில் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை பரிசோதித்தபோது, உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. முதியவர் உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ