பஸ் மோதி முதியவர் பலி
மயிலம்,: மயிலம் அருகே பஸ் மோதி முதியவர் இறந்தார்.மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராசு, 65; இவர் நேற்று முன்தினம் சுகாதார மருத்துமனைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது, திருச்சியிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற தனியார் பஸ் செல்வராசு மீது மோதியது. இந்த விபத்தில் செல்வராசு சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.