முதியவர் மாயம்; போலீஸ் விசாரணை
விழுப்புரம்; விழுப்புரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60; இவர், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.