உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

மயிலம் : மயிலம் அருகே பைக் மோதி மூதாட்டி இறந்தார். மயிலம் அடுத்த தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி கிருஷ்ணம்மாள், 96; இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் கிராமத்தில் சாலையை கடந்து சென்ற போது, மயிலத்தில் இருந்து புதுச்சேரி சென்ற பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கிருஷ்ணமாள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி