மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
விழுப்புரம்; விழுப்புரத்தில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 19வது ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது. மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். நிர்வாகி அன்பழகன் முன்னிலை வகித்தார். சண்முகம் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். விழுப்புரம் மண்டல செயலாளர் வெங்கடாசலம் தொடக்க உரையாற்றினார். கிளைச் செயலாளர் புருஷோத்தமன் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் சந்திரசேகரன் வரவு, செலவு அறிக்கை சமர்ப்பித்தார். மாநில செயலாளர் சம்பத்ராவ் பேசினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துகுமரன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் கணேசன் நிறைவுறையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், கண்ணையன், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய கிளைத் தலைவராக ஜெயராமன், செயலாளராக புருஷோத்தமன், பொருளாளராக சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.
17-Aug-2025