உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை கல்லுாரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

தெய்வானை கல்லுாரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கு

விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் வேலை வாய்ப்பு குறித்த சிறப்பு கருத்தரங்கு நடந்தது.கல்லுாரியின் வேலை வாய்ப்பு ஆலோசனைக் குழுமம் சார்பில், 'எல்லோருக்குமான செயற்கை நுண்ணறிவும், அதனுடைய வேலை வாய்ப்பு திறன்களும்' தலைப்பில் நடந்த கருத்தங்கில், கல்லுாரி முதல்வர் அகிலா, வேலை வாய்ப்பு பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.கணிதத்துறை உதவி பேராசிரியர் பர்ஜானா வரவேற்றார். கருத்தரங்கில், ெஹச்..சி.எல்., நிறுவன கேரியர் கிராப்ட் அகாடமி, தொழில்நுட்ப பயிற்சியாளர் சரஸ்வதி பேசினார். செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சிலம்பரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ