உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்

ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ் சார்பில், சாலையோர ஆக்கிரமிப்பு, கட்சி கொடி கம்பம் அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று 2வது நாளாக விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நெடுஞ்சாலை துறை உதவிபொறியாளர்கள் கவுதம், ராதிகா தலைமையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், போலீசார் முன்னிலையில், கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில் துவங்கி மகாராஜபுரம், கம்பன் நகர், ஆசிரியர் நகர் வரை, சாலையோர கட்சி கொடி கம்பங்கள், கடைகளின் முகப்பு ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். கட்சி கொடி கம்பங்களை அகற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து சமாதானப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை